தகவல்கள் செய்திகள்

Breaking

Post Top Ad

Monday 25 May 2020

சிறுநீரக செயலிழப்பை காட்டும் முக்கியமான அறிகுறிகள்..! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்கள்..!

நமது உடல் உறுப்புகளில் மிகவும் பிரதான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள். உடலில் இருக்கும் அனைத்து விதமான கழிவுகள், நச்சுக்களை வெளியேற்ற சிறுநீரகங்கள் உதவி செய்கிறது.சிறுநீரக செயலிழப்பை காட்டும் முக்கியமான அறிகுறிகள்..! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்கள்..!
உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல் உடலில் தங்கிவிடுவதையே சிறுநீரக செயலிழப்பு என்கிறோம். சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. சிறுநீரகம் இல்லாவிட்டால் நமது இரத்தம் சுத்திகரிக்கப்பட வாய்ப்பே இல்லை.
பொதுவாக சிறுநீரக செயலிழப்பை நாம் பின்வரும் அறிகுறிகள் மூலம் நாம் எளிதாக கண்டறியலாம்.
1 . சிறுநீரில் பிரச்சனை:
ஒரு நாளைக்கு சராசரியாக 1500 மி.லி முதல் 2000 மி.லி வரை வெளியேற்றுவோம். அப்படி நாம் சிறுநீர் வெளியேற்றும் போது நுரை நுரையாக வெளியேறுவது, வழக்கத்தைவிட அதிகமாக அல்லது குறைவான அளவு சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுவது, சிறுநீர் வருவது போன்று இருக்கும் ஆனால் சிறுநீர் வராமல் இருப்பது போன்றவை சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள்.
2 . கை, கால்களில் வீக்கம்:
உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற நீரை சிறுநீரகம் கண்டிப்பாக வெளியேற்றி விடும் அப்படி வெளியேற்ற முடியாமல் நீர் உடலில் தங்கியிருப்பதால் கை, கால், முகம் போன்றவற்றில் வீக்கம் ஏற்படும்.இதுவும் அறிகுறி தான்.
3 . அதிக சோர்வு மற்றும் இரத்த சோகை:
நமது உடலில் இருக்கும் சிறுநீரகம் எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ஆக்சிஜனை நம் இரத்த சிவப்பு அணுக்கள் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகங்கள் பாதிப்படைந்தால் இந்த ஹார்மோன் சுரப்பது தடைப்பட்டு ஆக்சிஜன் இரத்த சிவப்பு அணுக்களை எடுத்து செல்லும் வேகம் குறையும். இதன் காரணமாக உடல் செல்களுக்கு தேவையான சக்தி கிடைக்காது. இதனால் சோர்வு, இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
4 . மறதி, தலைசுற்றல்:
மேற்கூறியவாறு சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது நமது மூளைக்கு தேவையான அல்லது போதுமான ஆக்சிஜன் குறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும். மூளையின் வேலை தடை பட்டால் நமது உடலின் அணைத்து செயல்களும் பாதிக்கும்.
5 . குமட்டல் / வாந்தி:
சிறுநீரகத்தில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் குமட்டல் ஏற்பட்டு வாந்தி வர அதிக வாய்ப்புள்ளது. அதுவே, காய்ச்சல் ஏற்பட்டு குமட்டல் வந்தால் உங்கள் சிறுநீரகத்தில் சிறுநீர் கற்கள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் சிறுநீரக கல் இருக்கும் சமயத்தில் இரத்தம் கலந்து வரும்.
சிறுநீரக செயலிழப்பை காட்டும் முக்கியமான அறிகுறிகள்..! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்கள்..!

No comments:

Post a Comment